அமெரிக்காவில் அரசு நிர்வாகத்திற்கான நிதியை ஒதுக்குவதில் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏழுந்திருக்கிறது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அரசு செலவினங்களுக்கு சிக்கல் எழுந்திருக்கிறது. அரசு செலவுகளுக்கான வரம்பு நிறைவடைந்த நிலையில் மேற்கொண்டு செலவழிக்க ஒப்புதல் கிடைக்கவில்லை.
அமெரிக்க அரசின் நிதி வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில், அமெரிக்க அரசாங்கம் 2018ஆம் ஆண்டிற்கு பின் முடங்கியிருக்கிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைபடும் என்றும், தாமதமாகும் என்றும் ,தெரிவிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க அரசின் சேவைகள் முடங்கியிருக்கிறது.
அமெரிக்காவை குடியரசு கட்சி டிரம்ப் தலைமையிலான கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் கிளீன் கன்டினியூ ரெசல்யூஷன் என்கின்ற ஒரு மசோதாவை கொண்டு வராங்க. அதாவது இந்த மசோதா தொகை பொறுத்தவரை அரசின் நிதி வழங்குவதற்காக மற்ற எந்த திட்டங்களும் பழைய திட்டங்கள் சேர்க்காமல் புதிதாக அவர்கள் வரையறுத்துள்ள திட்டங்களை சேர்ப்பதற்கான மசோதாதான் அந்த மசோதா.
ஆனால் அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட்டில் குடியரசுக் கட்சிக்கு 53 இருக்கைகள் மட்டுமே இருக்கின்றது. மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவை என்கின்ற நிலையில் குடியரசுக் கட்சி ஜனநாயக கட்சியினுடைய ஆதரவை தவிர்க்க முடியாத ஒரு நிலைக்கு உள்ளது. கிட்டத்தட்ட ஒரு எட்டு ஜனநாயக கட்சியினர் செனட் வந்து ஆட்சி அவங்க வந்து வாக்களிக்க வேண்டும்.
ஆனால் ஜனநாயக கட்சியினர் தற்போது நிபந்தனை விதித்திருக்கிறார்கள். குறிப்பாக டிரம்பினுடைய சுகாதார திட்டங்கள் தொடர்பாக, மருத்துவ காப்பீட்டு சலுகைகள் நீட்டிக்க வேண்டும் என்கின்ற அந்த உத்தரவை தற்போது குடியரசு கட்சியினர் டிரம்ப் ஏற்க மறுப்பதன் காரணமாக இந்த மசோதா நிறைவேறவில்லை.
இதன் காரணமாக தற்போது அமெரிக்க அரசாங்கம் முடங்கி இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு செல்ல வேண்டிய நிதி பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவர்களுடைய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. சம்பளம் தாமதமாகும் என்பதால் முக்கியமில்லாத பணியாளர்கள் அனைவரும் தற்காலிகமாக ஊதியமின்றி விடுமுறை அளிக்கப்படும் ஒரு நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக வீசா பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறைகளில் தாமதமாகும் என கூறப்படுகிறது. தேசிய பூங்காக்கள், அருங்காட்சியங்கள் மூடப்பட்டிருக்கிறது. அரசு உதவி தரும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ராணுவம், தபால் சேவை மற்றும் மெடிகேர் உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அரசு முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு செல்ல வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு நாள் ஒன்றுக்கு 3,300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நமக்கே தெரியும் உலகம் முழுவதும் டாலர் தான் பொருளாதாரத்தை ஆட்டிவிக்கிறது.
இநிலையில் அமெரிக்க அரசாங்கத்தில் தற்போது முடக்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இதனுடைய தாக்கம் உலகம் முழுவதும் எதிரொளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.








