நாளை இந்தியாவிற்குள் இரவில் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சந்திர கிரகணத்தை மிக அருகில் பார்க்கலாம் என விஞ்ஞானி கிரிஸ்பின் கார்த்திக் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் கிரிஸ்பின் கார்த்திக் நாளை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக இரவு 12 மணி அளவில் நிலவு ஆரஞ் காப்பர் மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் என தெரிவித்த அவர் இதனை வெறும் கண்களில் கூட பார்க்கலாம் எனவும் கூறினார்.
அடுத்த சந்திர கிரகணம் 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தோன்றும் என கூறிய கிரிஸ்பின் கார்த்திக். சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் பூமியிலிருந்து 10,000 கிலோமீட்டர் தொலைவில் செல்லும்போது அந்த அறிய நிகழ்வை சற்று அருகில் கண்டு ரசிக்கலாம் என்று தெரிவித்தார்.








