மனிதனின் கண்களுக்கு எட்டாத தூரத்தில் இருள் சூழ்ந்த விண்வழியில் உலவுகிறது ஒரு மர்ம கிரகம். ஆம் அதன் பெயர் K2-18B. பூமியை விட பெரிதான இந்த உலகத்தில் உயிர் வாழும் சாத்தியங்கள் நிறைந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகளின் கண்களில் தென்படுகிறது.
முதலில் நீராவி இருப்பதற்கான சுவடு தெரிந்ததும் எங்கோ ஒரு கடலின் இறைச்சல் நம்மை அடைக்கிறதோ என்ற உணர்வை ஏற்படுத்தியது. பின்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கூறிய பார்வை மீத்தேன், கார்பன் டைஆக்சைடு போன்ற உயிர்வாழ ஆதாரமான வாயுக்களை கண்டறிந்தது. அடுத்த கட்ட ஆச்சரியம் ஒன்று உள்ளது.
அதாவது பூமியின் உயிர்களால் மட்டுமே உருவாகும் ட்ரைமிதைல் சல்பைட் என்னும் மூலக்கூறு அங்கு இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக நம்பப்படுகிறது. இவை அனைத்தும் நம்மை ஒரு கனவில் ஆழ்த்துகிறது.
பிரபஞ்சத்தின் அந்த தொலைதூர மூலையில் இன்னொரு பூமி நம் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ ஆனால் விஞ்ஞானிகள் இன்னொன்றையும் எச்சரிக்கையுடன் சொல்கிறார்கள். அது என்னவென்றால் இது உண்மையா மாயையா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆய்வுகள் அவசியம் என்பதே அது.
ஆனால் மனித மனம் மட்டும் அந்த பயணத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டது. K2-18B அங்கே உயிர் இருக்கிறதா என்ற கேள்வி இன்று நம் கற்பனையையும் எதிர்கால கனவுகளையும் சுமந்து பறக்க தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.








