Home உலகம் “புற்றுநோய்க்கு Full Stop வைக்க ரஷ்யாவின் புதிய தடுப்பூசி!

“புற்றுநோய்க்கு Full Stop வைக்க ரஷ்யாவின் புதிய தடுப்பூசி!

நீண்ட காலமாகவே ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுட்டு இருக்காங்க.

இப்போ அதுல ஒரு புதிய வெற்றி கிடைச்சிருக்கு. முக்கியமா இப்ப உருவாக்கப்பட்டிருக்க தடுப்பூசி ரஷ்யால இருக்க நோயாளிகளுக்கு ஃப்ரீயா (free)கொடுக்கப்படுதாம்.

அது என்ன தடுப்பூசி இது வெற்றிகரமா செயல்படுத்தப்படுதா அப்படிங்கறத பத்தி இந்த பதிவுல பார்க்கலாம்.

ரஷ்யாவின் பெடரல் மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (Federal Medical and Biological Agency of Russia) அதாவது (FMBA)புற்றுநோய்க்கான தடுப்பூசியை தயாரிச்சிருக்காங்க. அந்த நிறுவனத்தின் தலைவர் வெரோனிகா ஸ்போர்ட் சேவா எம்.ஆர்.என்.ஏ
அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்து முன் மருத்துவ பரிசோதனைகளலையும் வெற்றி பெற்றிருக்கு.

இந்த தடுப்பூசி இப்போ பயன்பாட்டுக்கு முழுசா தயாரா இருக்குன்னு சொல்றாங்க. என்டரோமிக்ஸ்னு சொல்லப்படுற இந்த தடுப்பூசி ஆரம்பத்துல பெருங்குடல் புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும். இது தவிர மூளை புற்றுநோய் சில வகையான மெலனோமாக்களுக்கு பயன்படுத்தப்படும் பணியும் நடந்துட்டு வருது.

இந்த தடுப்பூசி பல ஆண்டுகளா உருவாக்கப்பட்டு வருது. கடந்த மூணு வருஷமா முன் மருத்துவ பரிசோதனைகள்ல மட்டுமே கவனம் செலுத்திட்டு வந்தாங்க.

அப்பதான் இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டியின் அளவை 80% வரை குறைப்பதில பயனுள்ளதா இருக்குன்னு தெரிய வந்திருக்கு. ஒரு முறைக்கு மேல இந்த தடுப்பூசி செலுத்துறதும் பாதுகாப்பானதுதானும் சொல்லப்படுது.

இந்த நிலையில எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி அப்படின்னா என்ன? இந்த தடுப்பூசி எப்படி வேலை செய்யுதுன்னு இப்ப பார்க்கலாம்மெசஞ்சர் ஆர் .என். ஏ அப்படின்னு அழைக்கப்படுற எம்.ஆர்.என்.ஏ மரபணு குறியீட்டின் சிறிய பகுதி.

இது நம்ம செல்கள்ல புரதத்தை உருவாக்குது. எக்ஸாம்பிள்கு சொல்லணும்னா நம்ம உடலை வைரஸோ இல்ல பாக்டீரியாவோ தாக்கும்போது எம்.ஆர்.என்.ஏ
தொழில்நுட்பம் நம்ம செல்களுக்கு அதை எதிர்த்து போராட ஒரு வகை புரதத்தை உருவாக்க ஒரு செய்தியை அனுப்புது.

இதன் மூலம் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த தேவையான புரதத்தை உருவாக்கும். அது மட்டும் இல்லாமல் அந்த புரதத்தில இருந்து நம்ம உடல்ல அந்த வைரஸ அடையாளம் கண்டு அடிக்க போதுமான ஆன்டிபாடிஸும் உருவாகுது.

இப்போ இந்த வகையான தடுப்பூசிக்கு இனிவரும் காலங்கள்ல பெரிய வெற்றி கிடைக்கும். இதனால அதிக அளவிலான மக்கள் பயன் பெறுவாங்கன்னும் சொல்லப்படுது.