Home உலகம் “தானிய களஞ்சியமே அபாயத்தில்! துருக்கி மக்கள் பீதியில்”

“தானிய களஞ்சியமே அபாயத்தில்! துருக்கி மக்கள் பீதியில்”

துருக்கி நாட்டில் வறட்சி காரணமாக புதை குழிகள் உருவாகியுள்ளன. இவை விவசாய நிலங்களை அழித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

துருக்கியின் தானிய களஞ்சியம் என்று அழைக்கப்படும் கோனியா சமவெளியில் திடீரென புதை குழிகள் தோன்றுவதற்கு நிலத்தடி நீர் மட்டும் குறைந்து போனதே முக்கிய காரணம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென தோன்றும் மிகுந்த குழிகள் கோதுமை விளையும் முக்கியமான விவசாய நிலங்களை விழுங்கி விடுவதாகவும் வயல்களில் மட்டுமல்லாமல் சாலைகளுக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் அருகில் இந்த குழிகள் தோன்றுவதாலும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.