Home தமிழகம் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? – திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? – திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!

திருப்பூரில் எஸ்எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்த சண்முகவேல், விசாரணைக்காக சென்ற இடத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றார். எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு என்ற கேள்வியை அவர் முன்வைத்திருக்கிறார். காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் என்றும் அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விசாரிக்க செல்லும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டு கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து தமிழகத்தில் அரசியல், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காக இந்த டைவர்ஷன் மட்டுமே செய்யப்படுவதாகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றார்.

ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழ்நாடு என எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார். மக்களை காக்க தமிழகத்தை மீட்க ஒரே வழி தொடர்ந்து திமுக அரசை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வதாகவும் வலியுறுத்தியுள்ளார்.