விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல் குளம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலும் விஜயகரிசகுளம் கீழத்தெரு பகுதியில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
விசாரணையில் அப்பகுதி கீழத் தெருவை சேர்ந்த பொன்னு பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த வெடி விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. எனினும் பட்டாசு வெடிவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகினர்.
மேலும் ஒருவர் தீக்காயம் ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூன்று நபர்களின் உடலையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.








