Home தமிழகம் அந்தரத்தில் தூக்கிவீசப்பட்ட மாணவிகள் :

அந்தரத்தில் தூக்கிவீசப்பட்ட மாணவிகள் :

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற கார் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு இருச்சக்கர வாகனங்கள் மீது மோதியது.

மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோவை பெரிய மேக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கால்மலை ரோட்டில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளான 19 வயதான ரீனா கிருத்திகா ஆகியோர் டூவீலரில் வந்துள்ளனர்.

அதில் ரீனா ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார். அவர்கள் முன்னாள் திருமாலூர் நாயக்கன் காலேஜ் சேர்ந்த 53 வயதான ஆரிச்சாமி என்பவர் மொப்பட்டில் வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மயில்சாமி என்பவர் தனது காரில் வேகமாக வலதுபுரம் ஏறி சென்றபோது டூவீலரில் வந்தவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் டூவீலரில் வந்தவர்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

மேலும் கார் மோதிய வேகத்தில் அங்கிருந்த மரமும் முறிந்து விழுந்தது. தொடர்ந்து மற்றொரு கார் மீது மோதி நின்றது. இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அடிபட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்றபோதும் பொதுமக்கள் போதையில் இருந்த கார் ஓட்டுனர் மயில்சாமியை பிடித்து பெரியநாயக்கன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.