Home தமிழகம் ’’ ஹேப்பி நியூஸ் “ தாயுமானவர் திட்டம் :

’’ ஹேப்பி நியூஸ் “ தாயுமானவர் திட்டம் :

தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார்.

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள். ரேஷன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் விட்டிற்கே சென்று ரேஷன் பொருள் அரிசி, பருப்பு,ஜீனி போன்ற ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யக்கூடிய அந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தை பொறுத்தவரைக்கும் 34,809 நியாய விலை கடைகளிலும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் 20,42,657 முதியவர்கள் பயன் அடைவார்கள் எனவும் 1,27,797 மாற்று திறனாளிகள் என மொத்தமாக சேர்த்து 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்ப பொருட்கள் அவர்களுடைய வீடு தேடி சென்று விநியேகிக்கப்படட இருக்கிறது.

இதற்கான வாகனத்தையும் இன்று முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கிறார். வீடுகளுக்கு சென்று உடனே ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக வாகன சேவையும் தொடங்கி வைக்கிறார்.

தமிழக முழுவதும் இருக்கக்கூடிய கிட்டத்தட்ட 30,000 மேற்பட்ட நியாயவிலை கடைகளின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களினுடைய தகவல்கள் எடுக்கப்பட்டு அந்த தகவலின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன் மூலமாக 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருடைய கணக்கு அடிப்படையாக வைத்து அவர்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு அதாவது அவர்கள் வீடுகளுக்கே வாகனங்கள் மூலமாக ரேஷன்
பொருள்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.