வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு எதிரொளியால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்திருக்கக்கூடிய நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்தத்துறை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.
முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்தத்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் காய்ச்சல், சளி, தும்மல், தழும்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது அவசியம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்த பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்தத்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.








