தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களை உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க ஒவ்வொரு தொகுதியாக செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.
அவரது பிரச்சாரம் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மக்களை சந்திக்கவுள்ளார். இந்த கூட்டங்கள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் அதாவது மொத்தம் 14 நாட்கள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற உள்ளது.
ஒரு நாளில் மூன்று முதல் நான்கு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்கிய முதல் பிரச்சார நிகழ்ச்சி பெரும் கூட்ட நேரிசலை ஏற்படுத்தியது.
இந்த கூட்டம் ஒரு பக்கம் விஜயின் அரசியலுக்கு ஆதரவாக பார்க்கப்பட்டாலும் திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அதாவது காலை 10:30 மணிக்கு நடைபெற வேண்டிய முதல் கூட்டம் மாலை 3:00 மணிக்கு தான் நடைபெற்றது.
இதனை எடுத்து அரியலூரில் அடுத்த கூட்டத்திற்கு செல்லவே இரவு 8 மணி முதல் 9 மணியை தாண்டியது. இந்த கூட்டத்தில் பேசி முடிக்கவே 10 மணியை
தாண்டியதால் பெரம்பலூர் பகுதியில் நடைபெற வேண்டிய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் பெரம்பலூர் பகுதிக்கு வருவதாக விஜய் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற 21ஆம் தேதி விஜய், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.
ஏற்கனவே திருச்சியில் விஜயின் பிரச்சாரத்தில் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்திற்கு போலீஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்த வகையில் விஜய் பிரச்சாரத்தின் போது அவரது வாகனத்தை தொண்டர்கள் பின்தொடர்ந்து வரக்கூடாது. போக்குவரத்தில் தடை ஏற்படுத்த
கூடாது.
ரோட் ஷோவில் வாகனங்களின் மீது நின்று செயல்படக்கூடாது. உரையாற்றுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ள புத்தூர் ரவுண்டான பகுதியில் மட்டுமே பேச வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மற்றும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு எந்தவிதமான சேதமும் விளைவிக்க கூடாது என்ற நிபந்தனைகளையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் அதனை இரண்டு மாவட்டங்களாக குறைக்க தாவேக்கவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாவேக்க தலைவர் விஜய் காரைக்கால் வழியாக நாகை மாவட்ட இளையான வாஞ்சூர் ரவுண்டானா வரவுள்ளார். அந்த இடத்தின் கட்சிகள் தொண்டர்கள் விஜய்க்கு வரவேற்பளிக்க உள்ளனர்.
இதை அடுத்து நாகூர் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் விஜய் பிரச்சார பேருந்து மூலம் பயணித்து புது ரவுண்டான பகுதிக்கு விஜய் செல்ல உள்ளார். மேலும் அங்கு மக்களை சந்தித்து பேச உள்ளார்.








