முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கான 36 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்த கூறிய மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரிவழக்கில் 36 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அவருடைய சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நோட்டீஸை எதிர்த்துதான் இந்த ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் வந்து விசாரித்தார். அப்போது ஜெயலலிதாவின் வருமானவரி தொகை 36 கோடி ரூபாய் என்பதை தற்போது திருத்தி அமைக்கப்பட்டு, குறைக்கப்பட்டு, 13 கோடியாக செலுத்த வேண்டும் என்று புதிய நோட்டீஸ் தீபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருமானவரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த ஒரு மனுவை பொறுத்தவரைக்கும் 36 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த வருமானவரித்துறை நோட்டீஸ் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது.
எனவே இந்த இந்த வழக்கு தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளதனால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. செல்லத்தக்கதில்லை என்று தெரிவித்து தீபாவுடைய மனுவை தற்போது தள்ளுபடி செய்துவிட்டார்கள்.
அதேபோல் தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என்றும் தற்போது உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.








