இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பெரிய பலனை வழங்கியுள்ளது. முன்பு 12% வரிவிதிக்கப்பட்டிருந்த 99% பொருட்கள், தற்போது 5% வரி கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் வீடு, டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
அரசு வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டு, தற்போது புதிய நடுத்தர வர்க்கத்தை நோக்கி முன்னேறி வருகிறார்கள். மேலும், ₹12 லட்சம் வருமானம் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் நேரடியாக நாட்டின் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைகின்றன.
அதே நேரத்தில், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனக் கருதப்படும் MSME துறைக்கு கூடுதல் ஊக்கம் வழங்கப்பட இருப்பதாகவும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக சந்தையில் போட்டியிடும் தரத்தில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“சுதேசி பொருட்கள் எங்கள் விடுதலைக்கு சக்தி தந்தது போல, நாட்டின் வளர்ச்சிக்கும் புதிய வலிமை தரும்” என்று உரையில் குறிப்பிடப்பட்டது. 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, தற்சார்பு பாரதம் என்ற பாதை மட்டுமே வழிகாட்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
உரையை நிறைவு செய்த அவர், வளர்ச்சியின் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனக் கூறி, மக்களுக்கு நவராத்திரி நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்








