Home தமிழகம் “மனித உயிர் மேலானது – கரூர் துயரத்தில் முதல்வர் உருக்கம்”

“மனித உயிர் மேலானது – கரூர் துயரத்தில் முதல்வர் உருக்கம்”

கரூர் நடந்தது பெருந்துயரம் ,கொடும்துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம், மருத்துவமனைக்கு நான் நேர்ல போய் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகல கனத்த மனநிலையிலயும் துயரத்திலும்தான் இன்னும் இருக்கேன். செய்தி கிடைச்சதும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவர்களையும் பிறப்பிச்ச பின்னாலும் என்னால வீட்டில் இருக்க முடியல.

உடனே அன்னைக்கு நைட்டே கரூருக்கு போனேன். குழந்தைகள் பெண்கள்னு 41 உயிர்களை நாம இழந்திருக்கிறோம். இறந்து போனவங்க குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாய் அறிவிச்சு அதை உடனடியாக வழங்கிட்டு இருக்கோம். ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை பெற்று வரவங்களுக்கு அரசு சார்பில முழு சிகிச்சையை வழங்கி வரோம்.

நடந்த சம்பவங்களுக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தோட அறிக்கை அடிப்படையில் அரசோட அடுத்த கட்ட நடவடிக்கையில் இருக்கும்னு உறுதி அளிக்கிறேன்.

இதற்கிடையே சோசியல் மீடியால சிலர் பரப்புற வதந்தைகளையும் பொய் செய்திகளையும் பார்த்துட்டு தான் இருக்கேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறக்கிறத எப்பொழுதும் விரும்ப மாட்டாங்க.

இந்த சம்பவத்தில உயிரிழந்தவங்க எந்த கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரைக்கும் அவங்க நம்முட தமிழ் உறவுகள் எனவே சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கக்கூடிய இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில விஷமத்தனமான செய்திகளை தவிர்க்கணும்னு கேட்டுக்கிறேன்.

அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துக்கணும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம்ம எல்லோருடைய கடமை எனவே ஆணைய அறிக்கை கிடைச்ச பிறகு

எல்லா அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்களுட ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள் நெறிமுறைகள் வகுக்கப்படும்னு உறுதி அளிக்கிறேன் அத்தகை நெறிமுறைகளுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தருவாங்கன்னு நம்புறேன்.

மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது. மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள் கொள்கை முரண்பாடுகள் தனிமனித பகைகள்னு எல்லாத்தையும் விளக்கி வச்சிட்டு எல்லாரும் மக்களுடைய நலனுக்காக சிந்திக்கணும்னு கேட்டுக்கிறேன்.

தமிழ்நாடு எப்பவுமே நாட்டுக்கு பல வகைகளில் முன்னோடியாகதான் இருந்திருக்கு. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலயும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம்ம எல்லோருடைய கடமை