Home விளையாட்டு “உலக அரங்கில் தமிழகம் உயர்த்திய சிறுமி

“உலக அரங்கில் தமிழகம் உயர்த்திய சிறுமி

உலக கேட்டர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று, தாயகம் திரும்பிய தமிழக வீராங்கனையான 10 வயது சிறுமி ஹர்வாடிகா அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கசகஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக கேட்டர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 10 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை ஹர்வாடிகா சாம்பியன் பட்டம் வென்றார். தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஹர்வாடிகா தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுப்பதால் இலக்கை எளிதாக அடைய முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.