Home விளையாட்டு 2026 ஐபிஎல் அதிரடி மாற்றம்: போட்டிகள் திடீரென அதிகரிப்பு… ரசிகர்கள் ஷாக்!

2026 ஐபிஎல் அதிரடி மாற்றம்: போட்டிகள் திடீரென அதிகரிப்பு… ரசிகர்கள் ஷாக்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 19வது ஐபிஎல் தொடரிலிருந்து 84 போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது.

இதன்படி ஒவ்வொரு அணியும் 16 லீக் போட்டிகள் ஆட வேண்டியிருக்கும். இதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் 14 போட்டிகள் மட்டுமே ஆடியது. ஆனால் தற்போது ஒவ்வொரு அணிக்கும் இரண்டு போட்டிகள் கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கும் தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய போட்டிகள் மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.

முன்னதாக மார்ச் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடங்கலாம் என தகவல்கள் வந்திருந்தன. ஆனால், டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறுவதால், வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் பொருட்டு, அதன்பின் ஒரு வாரம் கழித்தே ஐபிஎல் தொடங்கப்பட உள்ளது.