Home இந்தியா ஆப்பிள் தலைமை அதிகாரி எச்சரிக்கை“- AI தெரியாதவங்க போட்டியிலே பின்தங்குவாங்க”

ஆப்பிள் தலைமை அதிகாரி எச்சரிக்கை“- AI தெரியாதவங்க போட்டியிலே பின்தங்குவாங்க”

உலக வர்த்தகத்தில் முன்னனி கம்பெனியான ஆப்பிள்யோட CEO டிம் குக் தனது ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கை இப்போ ஒட்டுமொத்த உலக ஊழியர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையா மாறியிருக்கு.

சமீபத்துல ஆப்பிள் தலைமையகத்தில் நடந்த ஒரு மிக முக்கியமான மீட்டிங்ல டிம் குக் ஒரு விஷயத்தை ஆணித்தனமா சொல்லி இருக்கார். எல்லாரும் AI கத்துக்கோங்க இல்லன்னா கஷ்டம்தான். ஆமாங்க நாம AI கருவிகளை பயன்படுத்த தவறினால் போட்டியாளர்களிடம் ஆப்பிள் பின்தங்கி விடும்னு அவர் கடுமையா எச்சரித்திருக்கிறார்.

இன்டர்நெட், ஸ்மார்ட்போன், கிளவுட், கம்ப்யூட்டிங் இது எல்லாத்தையும் விட AI ஒரு மிகப்பெரிய புரட்சி. இந்த புரட்சியில் Apple ஜெயிக்கணும். ஜெயிக்கும்னு ஊழியர்களுக்கு அவர் ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்துருக்காரு.

கூகுள், சேர்ஜிபிட்டி மாதிரி கம்பெனிகள், AI ல முன்னாடி போயிட்டாங்களே, Apple கொஞ்சம் லேட் இல்லையான்னு நீங்க கேட்கலாம். அதுக்கு டிம் குக் சொன்ன பதில்தான் ஹைலைட். நாம எப்போதுமே முதல்ல வரது இல்ல.

மேக் கம்ப்யூட்டருக்கு முன்னாடி ஒரு பிசி இருந்துச்சு. ஐ போனுக்கு முன்னாடி ஒரு ஸ்மார்ட்போன் இருந்துச்சு. ஆனா நாமதான் அந்த பொருட்களோட மிகச்சிறந்த நவீன வடிவத்தை கொடுத்து சந்தையையே மாத்தி எழுதினோம்.

அதே மாதிரிதான் AI லையும் செய்ய போறோம்னு அவர் நம்பிக்கையோட சொல்லி இருக்காரு. இது வெறும் பேச்சு இல்ல செயலையும் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம போன்ல இருக்குற சிரி சரியா வேலை செய்யலன்னு நிறைய பேர் குறை சொல்லி இருக்கோம் இல்லையா இப்போ அந்த சிறிய மொத்தமா தூக்கிட்டு முற்றிலும் புதிய சக்தி வாய்ந்த AI தொழில்நுட்பத்தோட அதை மீண்டும் உருவாக்கிட்டு வராங்களாம்

அது மட்டுமில்லாம கடந்த ஒரு வருஷத்துல மட்டும் 12000 பேரை புதுசா வேலைக்கு எடுத்திருக்காங்க அதுல 40% பேர்AI ஆராய்ச்சிக்காக மட்டுமே வால்ட்ரா ஒரு புதிய AI சிப்ஹூஸ்டன்ல ஒரு பிரம்மாண்டமான AI சர்வர் மையம்னு ஆப்பிள் பல ஆயிரம் கோடிகளை AI கொட்டிட்டிட்டு இருக்கு.சுருக்கமா சொல்லணும்னா டிம் குக் சொல்ல வர்றது இதுதான்.AI என்பது இனிமே ஒரு ஆப்ஷன் கிடையாது. அது ஒரு அத்தியாவசியம். இந்த அட்வைஸ் வெறும் ஆப்பிள் ஊழியர்களுக்கு மட்டும் இல்ல நம்ம ஒவ்வொருவருக்கும் தான். நீங்க எந்த துறையில் வேலை செஞ்சாலும் சரி AI பத்தி கத்துக்க ஆரம்பிங்க. இல்லன்னா எதிர்காலத்தில் தாக்கு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.