Home இந்தியா “செங்கோட்டை அருகே நடந்த அதிர்ச்சிக்குப் பின்னால் உள்ள தடயங்கள்…”

“செங்கோட்டை அருகே நடந்த அதிர்ச்சிக்குப் பின்னால் உள்ள தடயங்கள்…”

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த கார் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பல்வேறு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கார் சென்ற வழித்தடம் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது.

பார்க்கிங் பகுதியில் கார் நுழைந்ததும், பின்னர் வெளியே சென்றதுமான காட்சிகள் சிசிடிவி பதிவுகளில் தெளிவாக பதிவாகியுள்ளன. இதனையடுத்து, சுங்கச்சாவடிகள் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.