இமயமலை பற்றிய சுவாரசியமான தகவல்கள் இமயமலை சுமார் 150 முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் டெதிஸ் கடல் பரப்பா இருந்துச்சு.
கடல் பக்கமா வடக்கு பக்கம் இருந்த யுரேசிய பிளேட் தெற்கு பக்கம் இருந்த இந்திய பிளேட் மெதுவாக வடத்திசையில் நகர்ந்து சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு யுரேசிய பிளேட்டுடன் மோதுச்சு.
அந்த மோதலின் விளைவாதான் கடலினின் அடிப்பகுதி மேலே தள்ளப்பட்டு உயர்ந்து இன்றைய இமய மலையாய் மாறுவி இருக்கு.
இன்று கூட இமய மலைகளில் உள்ள பாறைகளிலும், கற்களிலும், கடல் உயிரினங்களோட எச்சத்தை நாம பார்க்கலாம்.இமய மலையோட சிறப்புகளை அடுத்தடுத்து பார்க்கலாம்.
இமய மலையில் உள்ள எவரஸ்ட் சிகரம் 8848.86 ம உயரம் கொண்டது. இதன் உச்சி 7000 மட்டக்கு மேலே உள்ள பல சிகரங்களை இமய மலையில் பார்க்கலாம்.
இப்ப கூட இமய மலையோட உயரம் வருடத்திற்கு சில மில்லிமீட்டர் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறதா கூறப்படுது. இமய மலையோட நீர் ஆதாரத்தை எடுத்துக்கொண்டால் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற ஆறுகளின் பிறப்பிடமா இருக்கு.
ஆசியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர், வேளாண்மை, நீர், மின்சாரம் ஆகியவற்றிற்கு ஆதாரமா விளங்குது. பனிமலை கழுகு, சிவப்பு பேண்டா, திபத்மான்கள் போன்ற அரிய வகை விலங்குகளின் வாழ்விடமாக திகழ்கிறது.
பல்வேறு வகையான மூலிகை செடிகள், மருத்துவ செடிகள், இமய மலையில் மட்டுமே கிடைக்கக்கூடிய செடிகளும் காணப்படுது.
பலதரப்பட்ட மதங்களோட புனித இடமா கூட இந்த இமயமலை திகழ்கிறது. ஹிந்து, புத்த, சிக், ஜெயின் போன்ற பல மதங்களுடைய புனித இடமா இமயமலை திகழ்கிறது.
கங்கையாற்றின் தோற்ற இடமான கங்கோதிரி, அமர்நாத் குகை, கேதர்நாத், பத்ரிநாத் போன்ற யாத்திரை தலங்களும் இதனோட சிறப்பா பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளோட விருப்பமான இடமாகவும் இது திகழ்கிறது. ட்ரக்கிங், ஸ்கீயிங், ராப்டிங், மௌண்டைனரிங் போன்ற இமய மலையோட ஈர்ப்புகளா பார்க்கப்படுது.
பனியில் மூடப்பட்ட சிகரங்கள், பள்ளத்தாக்குகள், அருவிகள், ஏரிகள் ஆகியவை கண்ணைக்கவரும் விதமாக அமைந்திருக்கும். இத்தகைய சிறப்புகளை கொண்ட இமய மலை உலகத்தோட மிக சிறப்பான இயற்கை புவியியல், ஆன்மீகம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட மலைத்தொடரா பார்க்கப்படுகிறது.








