கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக 12 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர் ஆன்லைனிலும் கேசினோ உள்ளிட்டவற்றிலும் சூதாட்டம் நடத்தி சட்ட விரோதமாக பணம் ஈட்டியதாகவும் அதனை வெளிநாடுகளில் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திரா தொடர்புடைய அலுவலகங்கள் கேசினோக்கள் உட்பட 30 இடங்களில் சோதனை நடத்தியது.
கர்நாடகாவின் சித்திரதுர்கா, பெங்களூரு, ராஜஸ்தானின் ஜோத்பூர், மகாராஷ்டிராவின் மும்பை, கோவா உள்ளியிட்ட இடங்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் உட்பட 12 கோடி ரூபாய் ரொக்கம், 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்களை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திராவை அதிகாரிகள் கைது செய்தனர்.








