கோவைக்கு வந்த எர்ணாகுளம்–பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அழகாக அலங்கரிக்கப்பட்டு வந்து கொண்டிருந்த அந்த வந்தே பாரத் ரயிலுக்கு கோவை ரயில் நிலையத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று இந்திய பிரதமர் நான்கு முக்கிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரடியாக தொடங்கி வைத்த அவர், மற்ற மூன்று ரயில்களையும் வீடியோ கான்பரன்சிங் வழியாக தொடங்கி வைத்தார்.
தமிழக மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் எர்ணாகுளம்–பெங்களூர் இடையிலான வந்தே பாரத் ரயில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்கள் வழியாக கேஎஸ்ஆர் பெங்களூரு வரை செல்லும் இந்த ரயிலுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மங்கள வாத்தியங்கள், நடனங்கள், மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுடன் ரயிலை வரவேற்றனர். ரயில் பயணிகள், ரயில்வே துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.
தொழில் நகரமாக விளங்கும் கோவை மற்றும் பெங்களூரை இணைக்கும் இந்த ரயில், தொழில் துறையினருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
புதிய வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. கோவை போன்ற முக்கிய நகரங்களில் பயணிகள் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
பொதுவாக எர்ணாகுளம்–பெங்களூர் இடையிலான ரயில் பயணம் சுமார் 10 மணி நேரம் ஆகும் நிலையில், புதிய வந்தே பாரத் ரயில் வழியாக அதே தூரத்தை 8 மணி நேரம் 30 நிமிடங்களில் முதல் 8 மணி நேரம் 40 நிமிடங்களில் முடிக்கலாம் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.








