கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் எட்டாவது தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் மகளிர் நலன் காக்கும் இயக்கங்களை பிரதமர் துவக்கி வைத்திருக்கிறார்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு பிரதமர் நரேந்திர மோடியால் 2018ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம்தான் போஷன் அபியான் என்று குறிப்பிடப்படக்கூடிய இந்த தேசிய ஊட்டச்சத்து இயக்கம்.
இந்த திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் ஆறு வயது வரை இருக்கக்கூடிய குழந்தைகள் அதேபோன்று பருவ வயதை எட்டிய பெண்கள்,ஆகியோருக்குபல்வேறு வகையாக உதவிகள் செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும் பட்ஜெட்டிலே ஊட்டச்சத்து இயக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அதன் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுடைய நல்வாழ்விற்காக அவர்களுடைய சேய் நல்ல முறையில் ஊட்டச்சத்து குறைபாடற்ற ஒரு குழந்தையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிகளவிலான நிதி உதவி செய்யப்படுகின்றது.
அதன்அடிப்படையில் மத்திய அரசினுடைய திட்டமான தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தினுடைய எட்டாவது ஆண்டு தொடக்க விழாவிலே மத்திய பிரதேசத்தினுடைய தார் மாவட்டத்தில் பங்கேற்று இருக்கக்கூடிய ,பிரதமர் நரேந்திர மோடி கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கக்கூடிய எட்டாவது தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை இன்று தொடங்கி வைத்திருக்கின்றார்
இதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும் . அந்த நிதி என்பது நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்ற தகவலையும் மத்திய அரசின் சார்பில் வெளியிட்டிருக்கின்றார்கள்
மத்திய அரசினுடைய ஒரு திட்டமாக செயல்படுத்தப்படக்கூடிய நிலையில், கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாமல், பாலூட்டும் தாய்மார்கள் உட்பட அந்த தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தினுடைய தகுதி வரையறைக்கு உட்பட்ட ,ஆறு வயதுக்கு உட்பட்ட, குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலமாக போதுமான அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி கொள்ளக்கூடிய வகையிலாக நிதி வழங்கப்படுகின்றது.
மேலும் பல்வேறு வகையிலாக ஊட்டச்சத்து மிக்க பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி எட்டாவது ஆண்டாக இந்த நிகழ்வை தற்பொழுது மத்திய பிரதேசத்திலே தொடங்கி வைத்திருக்கின்றார்.








