ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ஆர்.பி.ஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆர்.பி.ஐ ஆளுனர் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி வீதமான 5.5% தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்தார். ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு வாகன கடனுக்கான இ.எம்.ஐ கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் தற்போது 880 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளதாகவும் இதன்மதிப்பு 4 லட்சத்து 32,000 கோடிக்கும் அதிகம் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுனர் சஞ்சய் மல்கோத்ரா கூறியுள்ளார். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 700.2 பில்லியன் டாலராக இருப்பதாகவும் 11 மாத இறக்குமதியை ஈடுகட்ட இது போதுமானது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








