இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் டியோல், பிரதமர் நரேந்திர மோடியிடம் “உங்கள் முகப்பொழிவிற்குக் காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பியதால் நிகழ்வில் சிரிப்பலை ஏற்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமரை சந்தித்தபோது, ஹர்லின் டியோல் அவரது ஸ்கின் கேர் (தோல் பராமரிப்பு) ரகசியம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு புன்னகையுடன் பதிலளித்த பிரதமர் மோடி, “நான் ஸ்கின் கேர் குறித்து எதுவும் செய்வதில்லை” என்று கூறினார்.
அவர் மேலும், “நான் கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மக்களின் ஆசீர்வாதமே எனது முகப்பொழிவிற்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே சிரிப்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியது.








