Home இந்தியா ரயிலில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் – ஏசி பெட்டியின் கண்ணாடி உடைத்து பரபரப்பு!

ரயிலில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் – ஏசி பெட்டியின் கண்ணாடி உடைத்து பரபரப்பு!

ரயில் பயணத்தின் போது ரயில் கண்ணாடியை ஆத்திரத்தில் உடைத்த பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்து டெல்லி மார்க்கத்தில் சென்ற ரயிலில் தனது குழந்தையுடன் ஏசி பெட்டியில் பயணித்த பெண் தனது பர்ஸை தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட்டும், உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த அந்த பெண் திடீரென ரயில் கண்ணாடியை உடைக்க தொடங்கினார்.

உடனிருந்த பயணிகள் சமாதானம் செய்தும் அதை பொருட்படுத்தாமல் கண்ணாடியை உடைத்துக் கொண்டிருந்தார். இது குறித்த காட்சிகள் சமூக வளத்தில் பகிரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டதாக ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.