Home இந்தியா இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்! பூமிக்கடியில் 20 டன் தங்க புதையல்!

இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்! பூமிக்கடியில் 20 டன் தங்க புதையல்!

தங்கம் நம்ம இந்தியர்களுக்கு இது வெறும் நகை இல்லைங்க. நம்மளுடைய எமோஷன் நம்ம பாதுகாப்பு, நம்ம பெருமை ஆனா அதோட விலைதான் நம்மளை எப்பவும் பயமுறுத்திக்கிட்டே இருக்கு.

இந்த நேரத்துல ஒடிசாவில் இருந்து ஒரு தங்கமான செய்தி வந்திருக்கு. ஒன்னுரண்டு கிலோ கிடையாது. சுமார் 20 டன் தங்க புதையல் பூமிக்கு அடியில் இருப்பதாக கண்டுபிடிச்சிருக்காங்க.

இந்த சூப்பரான செய்தியை கேட்ட உடனே நம்ம எல்லோர் மனசுலயும் வர ஒரே கேள்வி அப்பாடா இனிமே தங்கம் விலை குறையுமா என்பதுதான்.

இந்த கேள்விக்கான பதிலை வெறும் யூகமா பார்க்காம இது எப்படி நடைமுறையில் சாத்தியமாகணும் சில முக்கியமான காரணங்களோட விளக்கமாக பார்க்கலாம்.

முதல்ல ஒரு கசப்பான உண்மை. உடனடியாக விலை குறையாது. ஏன்னா பூமிக்கு அடியில் இருந்து இதை வெட்டி எடுத்து சுத்தம் பண்ணி மார்க்கெட்டுக்கு கொண்டு வர பல வருஷம் ஆகும்.

ஆனா நீண்ட காலத்துல விலை குறைய வாய்ப்பு இருக்கா? நிச்சயம் இருக்கு. அதுக்கு மூன்று முக்கியமான நடைமுறை காரணங்கள் இருக்கு.

காரணம் ஒன்று இறக்குமதி குறையும். முதல்ல நம்ம ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இந்தியாவுக்கு தேவையான தங்கத்துல நாம 90%த்த்கும் மேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி பண்றோம்.

அதாவது நம்ம தங்கம் வாங்க டாலரை கொடுத்து வெளிநாடுகளில் கையேந்தி நிற்க்கிறோம். இப்போ ஒடிசாவால கிடைச்ச இந்த 20 டன் தங்கம் மாதிரி நம்ம நாட்டுக்குள்ளேயே தங்கம் உற்பத்தி அதிகமாக ஆரம்பிச்சா நாம வெளிநாடுகளில் இருந்து வாங்குற தங்கத்துடைய அளவு குறையும்.

இதுதான் முதல்படி. காரணம் இரண்டு நம்ம ரூபாயோட மதிப்பு உயரும். இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமான பாயிண்ட். நாம வெளிநாட்டில் இருந்து தங்கம் வாங்கும் போது, நம்ம ரூபாய் நோட்டை கொடுத்து வாங்க முடியாது.

அமெரிக்கா டாலரை கொடுத்துதான் வாங்கணும். இதனால டாலருடைய தேவை அதிகமாகி நம்ம ரூபாயோட மதிப்பு குறையுது.

ஒருவேளை நம்ம நாட்டுலேயே தங்கம் உற்பத்தி அதிகமாகி நாம வெளிநாட்டுல தங்கம் வாங்குறது குறைஞ்சா என்ன ஆகும்? நாம டாலர செலவு பண்றது குறையும்.

இதனால உலக மார்க்கெட்ல டாலருடைய தேவை குறைஞ்சு நம்ம ரூபாயோட மதிப்பு உயரும். நம்ம ரூபாயோட மதிப்பு உயர்ந்தா நாம வெளிநாடுகளில் இருந்து வாங்குற மற்ற பொருட்களோட விலையும் குறையும்.

முக்கியமா நாம இறக்குமதி செய்கிற தங்கத்துடைய விலையும் குறையும். காரணம் மூன்று அரசாங்கத்துடைய விரிக்குறைப்பு. இப்போ அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து வர தங்க மேல இறக்குமதி வரின்னு ஒரு பெரிய வரிய போடுறாங்க. இதுவும் தங்கத்துடைய விலை அதிகமாக இருக்கறதுக்கு ஒரு முக்கிய காரணம்.

ஒருவேளை நம்ம நாட்டிலேயே தங்கம் உற்பத்தி அதிகமாகி நமக்கு தேவையான தங்கம் இங்கேயே கிடைக்க ஆரம்பிச்சா அரசாங்கம் இந்த இறக்குமதி வரியை குறைக்க வாய்ப்பு இருக்கு.

அப்படி வரி குறைஞ்சா தங்கத்துடைய விலை நேரடியாகவே குறையும். சுருக்கமாக சொன்னால் ஒடிசாவில் கிடைத்த இந்த தங்க புதையல் நம்ம இறக்குமதியை குறைக்கும்,

நம்ம ரூபாயோட மதிப்பை உயர்த்தும், அரசாங்கம் வரியை குறைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கும். இந்த மூன்று காரணங்களால நீண்ட காலத்திற்கு பிறகு தங்கத்துடைய விலை குறையறதுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கு.