Home இந்தியா “விலையை கேட்டால் அதிர்ச்சி, அம்சங்களை பார்த்தால் ஆசை! – iPhone 17 சீரிஸ்”

“விலையை கேட்டால் அதிர்ச்சி, அம்சங்களை பார்த்தால் ஆசை! – iPhone 17 சீரிஸ்”

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் iPhone 17 சீரீஸ் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

iPhone 17 சீரீஸ் போன்களின் விலை சிறப்பம்சங்கள் . Apple நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில் iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Maxக்ஸ் மற்றும் iPhone 17 ஏர் ஆகிய நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

iPhone -ன்கள் வெளியாகும் போதெல்லாம் அதன் கேமரா மாடல்கள் கவனம் பெறும். இந்த முறை iPhone 17 மாடல் இரட்டை கேமராவும் 17 ஏர் மாடல் ஓற்றை கேமராவையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Pro மற்றும் proக்ஸ் மாடல்களில் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. iPhone 17 மாடலில் 6.3 இன்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 48 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் மென் கேமரா மற்றும் 12 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. iPhone 17 மாடல் கருப்பு, வெள்ளை, ஸ்டீல் கிரே, லைட் ப்ளூ, பச்சை மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏர் மாடல் iPhone மிகவும் மெல்லிய போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் திரை கொண்ட இந்த போனின் பின்பக்கம் 2x டெலிபோட்டோ சப்போர்ட் கொண்ட 48 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஏர் மாடலில் மற்ற போன்களை போல தனியாக சிம் கார்டுகள் செலுத்த முடியாது எனவும் ஈசிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஆப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

iPhone 17 ஏர் மாடல் கருப்பு, வெள்ளை, லைட் கோல்ட் மற்றும் ஸ்கை பப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iPhone 17 Pro மற்றும் proரோ மக்ஸ் மாடல்களில் கேமராக்களில் 8X வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் தூரத்தில் இருக்கும் பொருளை கூட துல்லியமாக படம் பிடிக்க முடியும். இந்த இரு போன்களிலும் 8k தூரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

இரண்டு மாடல்களிலும் அதிவேக இணைப்பு வசதிக்காக வைபை 7 சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் நீளம் ஆரஞ்ச மற்றும் சில்வர் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட iPhone 17 மாடல் 82,990ஆகவும் iPhone 17 air ₹1,20,000ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஸ்டோரேஜ் வசதி கொண்ட iPhone pro1,34,990க்கும் proமேக்ஸ் 1,49,900ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மாடல்களில் முன்பதிவு வரும் வெள்ளிக்கிழமை என்று தொடங்கும் எனவும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு போன்கள் கிடைக்கும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.