Home இந்தியா “EMI குறைய வேண்டுமா? வங்கிகள் ஏமாற்றுகிறார்கள் என்றால் இதை உடனே செய்யுங்கள்!”

“EMI குறைய வேண்டுமா? வங்கிகள் ஏமாற்றுகிறார்கள் என்றால் இதை உடனே செய்யுங்கள்!”

“நாங்கள் வட்டியை குறைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அதன் பலனை மக்களுக்கு கொடுக்காமல், ஏன் அவர்களை இப்படி அவதியப்படுத்துகிறீர்கள்?”


இவ்வாறு நேரடியாகவே வங்கித் தலைவர்களை கண்டித்துள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

மும்பையில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களை சந்தித்த அவர், இந்தக் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.25% குறைத்து, 5.25% என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.

ஆனால் ரெப்போ வட்டி குறைந்தாலும், பல வங்கிகள் அதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

பொதுவாக ரெப்போ வட்டி குறைந்தால் வீட்டு கடன், வாகனக் கடன் போன்றவற்றின் வட்டியும் குறைய வேண்டும்.
அதனால் உங்கள் மாதாந்திர EMIயும் குறைய வேண்டும்.

ஆனால் பல வங்கிகள் EMIயை குறைக்காமல், அதற்கு பதிலாக கடன் காலத்தை மட்டும் குறைத்து விடுகின்றன.
இது பல வாடிக்கையாளர்களுக்கு தெரியவே தெரியாது.

உண்மையில், வட்டி குறைந்தால் EMIயை குறைப்பதா, கடன் காலத்தை குறைப்பதா என்பதைத் தேர்வு செய்யும் உரிமை கடன் வாங்கிய உங்களுக்கே. உங்கள் விருப்பத்தை கேட்காமல் வங்கிகள் தாங்களாகவே முடிவு எடுக்கக் கூடாது — அதுதான் விதி.

ஆனால் பல வங்கிகள் இந்த விதியைப் பின்பற்றவில்லை. இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி ஆளுநர்,
வாடிக்கையாளர்களை ஏமாற்றாதீர்கள். வட்டி குறைப்பின் பலனை உடனே அவர்களுக்கு வழங்குங்கள். EMI குறைய வேண்டுமா, இல்லை கடன் காலம் குறைய வேண்டுமா என்பது வாடிக்கையாளரிடமே கேளுங்கள்
என்று கண்டித்துள்ளார்.

உங்கள் வங்கி இன்னும் EMIயை குறைக்கவில்லை என்றால், உடனே உங்கள் வங்கி கிளைக்கு சென்று ஒரு கடிதம் எழுதி,
“எனது EMIயை குறைக்கவும் அல்லது கடன் காலத்தை குறைக்கவும்” என்று கோரி உங்கள் உரிமையை நிலைநாட்டலாம்.

உதாரணமாக, நீங்கள் 20 ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வீட்டு கடன் எடுத்திருந்தால், இந்த வட்டி குறைப்பால் உங்கள் EMI சுமார் ₹2,000 வரை குறைய வாய்ப்பு உள்ளது. இது உங்கள் தலையில் இருக்கும் பெரிய பாரத்தை குறைக்கும் இல்லையா?

எனவே, தாமதிக்காமல் உங்கள் வங்கியை அணுகி உங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள்.