Home விளையாட்டு “RCB போதும்… இப்போ RRயும் விற்கப்படுமா? ரசிகர்கள் ஷாக்கில்!”

“RCB போதும்… இப்போ RRயும் விற்கப்படுமா? ரசிகர்கள் ஷாக்கில்!”

வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி 19வது IPL தொடர் தொடங்குகிறது. இந்த முறை லீக் போட்டிகளும் அதிகரிக்க உள்ளதால், IPL இறுதி போட்டி மே 31ஆம் தேதி வரை நடைபெறும்.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூர் அணி போலவே, மற்றொரு பிரபல அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அணியின் 65% உரிமையை ராயல் ஸ்போர்ட்ஸ் குடும்பம் வைத்திருக்கிறது. இதைத் தொடர்பாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷா கோயங்கா, தனது X தளப் பக்கத்தில், “IPL போட்டியில் பெங்களூருக்கு தொடர்ந்து மேலும் ஒரு அணி விற்பனைக்கு வர இருப்பதாக கேள்விப்பட்டேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. எனவே இப்போது விற்பனைக்கு இரண்டு அணிகள் உள்ளன. அதை வாங்கப்போவது பூனே, அகமதாபாத், மும்பை, பெங்களூர் அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

IPL தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2008இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் IPL கோப்பையை வென்றது. ஆனால் அதன் பிறகு இரண்டாவது கோப்பையை அந்த அணியால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை.

இடையில் சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் அந்த அணிக்கு IPL தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.