Home விளையாட்டு சூப்பர் ரிட்டர்ன்: கோலி–ரோஹித் ஜோடி ஜனவரியில் மீண்டும் அதிர்கிறது!

சூப்பர் ரிட்டர்ன்: கோலி–ரோஹித் ஜோடி ஜனவரியில் மீண்டும் அதிர்கிறது!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் மீண்டும் இடம்பெற்றனர்.

ஆனால் அந்த தொடரில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இவர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பிசிசிஐ, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் அந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. இதில் விராட் கோலி இரண்டு சதங்களுடன் 302 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை வென்றார்.

ரோஹித்தும் இரண்டு அரைசதங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனைத் தொடர்ந்து, இவர்கள் மீண்டும் எப்போது விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2026 ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் போட்டிகளும் ஐந்து டி20 போட்டிகளும் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றால், அவர்கள் ஜனவரி மாதத்தில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட முடியும்.

இருவரும் தற்போது சிறந்த பாங்கில் இருப்பதால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர்களே விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.