தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் வருகிற 29 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ”வைப்பு நிதி உங்கள் அருகில் எனும் பெயரில் சிறப்பு முகாம் ” நடைபெறும் என்றும் , சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வருகிற 29 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை முகாம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஷனாய் நகரில் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி , விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் உடனான கலந்துரையாடல் ஆகிய சேவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.








