Home தமிழகம் உச்ச நீதிமன்றம் கண்டனம் :

உச்ச நீதிமன்றம் கண்டனம் :

வஞ்சக எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்து துறையின் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் 10% பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

வஞ்சக எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றமானது கடுமையான தனது கண்டனத்தை பதிவிட்டிருக்கிறது. அதேபோல் பல்வேறு கேள்விகளை அமலாக்க துறையிடம் எழுப்பி இருக்கிறது.

இந்த வழக்கு குறிப்பாக ஒரு தனி நபர் அதாவது அமலாக்கத்து துறைக்கு இருக்கக்கூடிய பல அதிகாரங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனு அதாவது அமலாக்கத்துறை கைது மற்றும் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற மற்றும் விசாரணை போன்ற பல அதிகாரங்களை கேள்விகளை எழுப்பி இந்த மனுவானது தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது

தொடர்ந்து இரண்டாவது நாளாக நடக்கிறது மிக முக்கியமாக இன்று நீதிபதிகள் ஈசி ஐஆர் என்று சொல்வார்கள் அதாவது அமலாக்கத்துறையால் புதிய செய்யப்படக்கூடிய ஒரு எஐஆர் என்று நாம் அதை எடுத்துக்கொள்ளலாம் .

அதை சுட்டிக்காட்டி இருக்கக்கூடிய நீதிபதிகள் சுமார் 5000ஈசிஐஆர்களை பதிவு செய்திருக்கிறீர்கள் ஆனால் உங்களால் வெறும் 10% பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கி கொடுக்க முடிந்திருக்கிறது.

அதாவது உங்களோட அமலாக்கத்ததுறையோட கன்விக்ஷன் ரேட் என்பது வெறும் 10% இருக்கிறது உங்கள் விசாரணை முடிவதற்கு குறைந்தது ஐந்து ஆறு ஆண்டுகளாகவும் அப்படி அதிக ஆண்டுகள் நடக்கக்கூடிய வழக்கில் அவர் ஒரு குற்றவாளி என்பதற்கு சுட்டிக்காட்டப்பட்டவர் குற்றமற்றவர் என்று உறுதியாகும் பட்சத்தில் அந்த இழுப்பீடுகளுக்கு யார் பதில் சொல்வது என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறது.

மிக முக்கியமாக இந்த குறைந்த அந்த கன்விக்ஷன் ரேட்டுக்கான காரணம் என்ன என்று இன்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமலாக்க துறையிலிருந்து ஒரு வழக்கில் பல வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.

அதேபோல இந்த அமலாக்க துறையுடன் இருக்கக்கூடிய விசாரணை அதிகாரிகள் போதிய திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற பல்வேறு கருத்துக்களை இன்று அமலாக்கத்ததுறை நீதிமன்றத்தின் முன் தெரிவித்திருக்கிறது. இன்னும் பல கடுமையான கேள்விகளை இன்று உச்சநீதிமன்றமானது தற்போது எழுப்பி இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

மீண்டும் இந்தவழக்கு விசாரணையானது மீண்டும் தொடரும். இந்த வழக்கு என்பது மிக முக்கியமாக அமலாக்க துறைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கக்கூடிய அதிகாரங்களை பற்றி கேள்வி எழுப்பக்கூடிய மனம் அதனால் இந்த வழக்கு விசாரணையானது மூன்றாவது நாளாக நாளையும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம் .