முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் அன்பு கரங்கள் திட்டம் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தொடங்கப்பட்டிருக்கிறது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கல்வியை தொடர மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தான் அன்பு கரங்கள் திட்டம். தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சின்னஞ்சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தவிப்பது என்பது விவரிக்க முடியாத வழி. சில குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு வானில் மறைந்த நிலவாக இருக்கிறது.
அன்பும் அரவணைப்பும் சிலருக்கு எட்டாத மலராகவும் மற்றோருக்கு புன்னகை பூக்கும் பூந்தோட்டமாகவும் திகழ்கிறது. அரவணைப்போ அன்போ எல்லா குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.
விபத்து, குடும்ப சிக்கல் ,இழப்பு ஏதோ ஒன்று போதும். ஒரு குழந்தையின் புன்னகையை பறிக்க அந்த இழந்த புன்னகையை மீட்டெடுக்கும் பொறுப்பு சமூகத்தின் கடமை என உணர்ந்து ஒரு தலைவர் புன்னகைகளை மலரச் செய்யும் பயணத்தை மேற்கொள்கிறார்.
நமது முதல்வர் தாய் மாணவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குழந்தைகள் இழந்த புன்னகையை மீண்டும் மலரச் செய்ய வேண்டும். பெற்றோர் நிறைவேற்ற வேண்டிய அன்பின் கடமைகளை நாமே ஏற்று அவர்களுக்கு அரவணைப்பு தர வேண்டும்.
புன்னகையை புதுப்பிக்கும் முதலமைச்சராக நம் தமிழ் மண்ணுக்கு அன்பின் தலைவராக நாம் ஒரு முதலமைச்சரை பெற்றுள்ளோம். தாய் உள்ளம் கொண்ட தலைவர் என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அன்பு கரங்கள் திட்டம். ஆம் அன்பு கரங்கள் வெறும் திட்டம்ல்ல. ஒரு தாயின் அரவணைப்பு ஒரு தலைவனின் கருணை ஒரு சமுதாயத்தின் நம்பிக்கை பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவு தேவைப்படும் நிலையில் உள்ள குழந்தைகளுக்காக இத்திட்டத்தினை தொடங்கி உள்ளார்.நம் முதல்வர்.
ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு இருளில் தவிக்கும் உள்ளங்களுக்கு ஒளியாய் வருபவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வியை தொடர மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கும்,அன்பு கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் இந்த திட்டம் என்பது தொடங்கப்பட்டிருப்பது முத்தாய்ப்பாக உள்ளது.








