வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 8:30 மணிக்கு இலங்கை கடற்கரையிலிருந்து தென்மேற்கு திசையில் இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
மேல்காற்று சுழற்சியின் தாக்கம் காரணமாக, இந்த தாழ்வு பகுதி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோமீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. இன்று காலை உருவான இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியிருந்தாலும், இதுவரை அது தீவிரம் பெறாத நிலையில் உள்ளது. தற்போதைய இந்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுமா, அல்லது அடுத்தடுத்த நிலைகள் என்ன என்பதை அதன் நகர்வும் தீவிரத்தன்மையும் தான் தீர்மானிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைக்கிணங்க, இலங்கை அருகே ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது எந்த திசை நோக்கி நகரும், இதன் தாக்கத்தால் வடக்குக் கடலோர மாவட்டங்களில் மழை ஏற்படுமா, அல்லது டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புகள் உருவாகுமா என்பவை அனைத்தும் அடுத்தடுத்த நகர்வுகள் மற்றும் தீவிரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மொத்ததில், இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








