Home தமிழகம் ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி :

ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி :

தமிழகத்தில் 27லட்சத்து63ஆயிரம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை ஏழு மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சியை சென்னை செனாய் நகரில் உள்ள பள்ளியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் இந்த திட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பள்ளி, அங்கன்வாடி, குழந்தைகள் காப்பகம் என மூன்று அணுகு முறைகளில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 15 வயது வரையுள்ள மொத்தம் 27லட்ச63,152 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி ஒரு டோஸ் போடப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய மூளை காய்ச்சல் நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து பெற்றோர்கள் பாதுகாவலர்கள் பள்ளி அதிகாரிகள் ஆகியோர் கல சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

சல் தடுப்பூசி ஒரு முறை முகாமை ஒன் டைம் கேம்பில் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் 1 முதல் 15 வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இன்று விரிவுப்படுத்தப்படுகிறது

இந்த திட்டத்தை பொறுத்தவரை ஒன்று முதல் 15 வரையிலான மொத்தம் 27 லட்சத்தி 63ஆயிரத்த 152 குழந்தைகளுக்கு இந்த மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ஒரு டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.