நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கிறார்கள். தென்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கக்கூடிய வேளாங்கண்ணி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. கடற்கரை நகரமான வேளாங்கண்ணி நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இந்த பேராலயத்திற்கு ஜாதி மத வேறுபாடு இன்றி தினந்தோறும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் மாதா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கூட்டு திருப்படி நடைபெறும்.
தொடர்ந்து செப்டம்பர் எட்டாம் தேதி மாதா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு அன்று மாலை கொடி இறக்கப்பட்டு ஆண்டு விழா நிறைவு பெறும். கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்லிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் குவிந்து வருகின்றனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மாதா சொரூபம் தாங்கிய வாகனங்களை ஊர்வலமாக எடுத்து வந்து மரியே வாழ்க ஆதி மரியே என்ற முழக்கத்தோடு வந்த
வண்ணம் உள்ளனர்.
தாங்கள் அணிந்து வந்த மாலையினையும் காணிக்கைகளையும் கொடியேற்றப்படும் இடத்தில் கட்டி தங்களது வேண்டுதல்களையும் மெழுகுவத்தி ஏற்றி பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவை ஒட்டி பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் கழிப்பிட வசதிகள் உணவு வசதிகள் உயர் அவசர மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா கோபுரங்கள் முக ஸ்கேனிங் தொழில்நுட்பங்கள் ஒன்றிட்டவர்கள் ஏற்படுத்தி 3000க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பக்தர்கள் மற்றும் பயணிகள் கடலில் குளிப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கடலோர காவல் படையில் பாதுகாப்பு படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொடியேற்றும் நிகழ்வை முன்னிட்டு நாளை நாகை கீழூர் வட்டாதாரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆண்டு கொடிய நிகழ்விற்கு வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பக்தர்கள் புனித ஆரோக்கிய எண்ணை பேராலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது.








