சந்திர கிரகணத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் இன்று மாலை கோவில் நடை சாத்தப்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
சனீஸ்வர பகவான் சன்னதி கிரகண நேரத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்திருக்கும் என்றும், மாலை நேரத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.








