வேலூரில் பெய்த கனமழையால் கன்சால்பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீருடன் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இரவு கனமழையானது கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் கனமழை விடிய விடிய பெய்தது. இதில் அதிகபட்சமாக வேலூர் மாநகராட்சிக்குள் உட்பட்ட பகுதிகளில் 134.30 மில்லிமீட்ட அளவு மழை பெய்தது
ஒட்டுமொத்தமாக வேலூர் மாவட்டத்தில் சராசரியாக 55.33 மில்லிமீட்ட அளவிலான மழை பதிவாகியுள்ளது. இதில் பெய்த கனமழையின் காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கன்சால்பேட்டை பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள தெருக்களில் தண்ணீரானது இப்போ வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
இதில் முக்கியமாக அப்பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாய் வழியாக வரும் மழைநீர் மற்றும் அந்த கால்வாயில் செல்லும் கழிவு நீரும் சேர்ந்து இந்த தெருவில் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் இப்பகுதி பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இந்த நிக்கல்சல் கார்வாய் சரியாக தூர்வரப்பாடாததால் இதில் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து இப்பகுதியில் உள்ள தெருவில் முழுவதுமாக சேர்ந்து வீடுகளுக்குள் மழை நீரும் கழிவு நீரும் புகுந்துள்ளது.
இதனால் அவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன ஒவ்வொரு முறையும் மாநகராட்சி இப்பகுதியில் வந்து இந்த மழைநீரை வடித்துவிட்டு செல்வதோடு மீண்டும் அப்பகுதியில் நிரந்தரமான ஒரு தீர்வை அவர்களுக்கு காணாமல் வைத்துள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் இந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் தற்போதும் அங்கு 40 குடியிருப்புகளிலும் மழை நீர் சூழ்ந்து இருந்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளதால் அவர்கள் வீடுகளில்லிருந்து வெளியே வர முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதேபோல வேலூரில் உள்ள கொசப்பேட்டை பகுதியில் உள்ள அவல்கார தெருவிலும் அங்குள்ள குடியிருப்புகளிலும் வீடுகளுக்குள் மழைநீரானது சென்றுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து உள்ளனர்.
உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மழைநீரால் பாதிக்கப்படும் இப்பகுதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது








