Home தமிழகம் பருத்தி விலை சுமை மீது அமெரிக்கா வரி அதிர்ச்சி!வெளிநாட்டு சந்தை நெருக்கடிக்கு உடனடி உதவி கோரி...

பருத்தி விலை சுமை மீது அமெரிக்கா வரி அதிர்ச்சி!வெளிநாட்டு சந்தை நெருக்கடிக்கு உடனடி உதவி கோரி மோடிக்கு EPS வலியுறுத்தல்!

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருக்கிறார்

அமெரிக்கா விதித்த 50% வரி விதிப்பு இருக்கும் நிலையில் ஜவுளி ஏற்றுமதி தொழில் துறைக்கான அவசர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் .

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் திருப்பூர் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் முக்கிய பங்குஆற்றி வருகிறது அதாவது ஜவுளி துறையில் . இங்கு வந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பீகார் உத்தர பிரதேசம் சத்தீஸ்கர் போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் இங்கே பணியாற்றி வருகிறார்கள்.

ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு திருப்பூர் ஜவுளி துறை என்பது வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இதற்கிடையே தொழில்துறை இந்தியாவின் நெய்தல் அதாவது நெய்தல் உடை ஏற்றுமதியில் சுமார் 60% பங்கு இந்தியாவிலேயே திருப்பூர் 60% ஏற்றுமதி பங்கை வகித்து வருகிறது.

நாட்டிற்கு பெருமளவு வெளிநாட்டு செலவாணியை ஈட்டி தருகிறது. எனினும் பருத்தி நூல் விலைகளின் நிலை தடுமாற்றம் மற்றும் உற்பத்தி செலவின் அதிகரிப்பு காரணமாக தொழில் தற்பொழுது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சமீபத்தில் அமெரிக்கா விதித்த 50% வரி உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுமதியாளர்களுக்கும், அதேபோல தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பெரும்பாலும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் துறையில் ஏற்கனவே சோர்ந்து போன நிலையில், மேலும் மோசமாக்கி இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் உடனடி நிவாரணம் வந்து வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடி அவர்களுக்கு இபிஎஸ் வலியுறுத்தி இருக்கிறார். அதேபோல ஊக்க தொகையும் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.