Home தமிழகம் “நோய் பரவும் அபாயம்: வாரம் முழுக்க கழிவுநீரில் சிக்கிய குடியிருப்போர்”

“நோய் பரவும் அபாயம்: வாரம் முழுக்க கழிவுநீரில் சிக்கிய குடியிருப்போர்”

சென்னை திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் ஐந்தாவது குறுக்கு தெருவில் ஒரு வார காலமாக கழிவுநீரானது நிரம்பி கொப்பளித்தபடி வெளியேறுவதால் தெருக்களில் சூழ்ந்து கழிவுநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் கவுன்சிலர் இல்லாததால் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வார காலத்துக்கு மேலாக இந்த கழிவுநீர் நிரம்பி உள்ளதால் தெருக்கள் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவு நீரில் பாசி படிந்து துர்நாற்றம் விசுகிறது. குடியுருப்பு வாசிகள்அதிகம் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவு நீரானது சூழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக சாலையில் நடக்க கூட முடியாத அளவிற்கு கழிவுநீரானது தேங்கி இருக்கிறது. பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.

மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு தேங்கி இருக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தாலும் கூட அலட்சியத்துடனே இந்த கழிவுநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுதாகவும்.

இது சம்பந்தமாக திருவொற்றியூரில் உள்ள ஏரியா இன்ஜினியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இந்த பகுதி மட்டுமல்லாமல் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில பகுதியில் இந்த மேனுவல் மூடிகள் உடைந்து அதிலிருந்து கழிவு நீரானது வெளியேறி அதிக அளவில் பெரும் துர்நாற்றம் வீசி வரும் சூழ்நிலையில் இது போன்ற செயல்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..