Home தமிழகம் “ஒரே இரவில் ஐந்து கொள்ளை, ஒரு வழிப்பறி – மக்கள் பதட்டம்”

“ஒரே இரவில் ஐந்து கொள்ளை, ஒரு வழிப்பறி – மக்கள் பதட்டம்”

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்த ஐந்து இடங்களில் கொள்ளை சம்பவங்கள் மற்றும் ஒரு வழிப்பறி சம்பவம் என மொத்தம் ஆறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.

பணம், செல்போன் மற்றும் ஒரு கார் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவில் நடந்த தொடர் குற்றச் செயல்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலையூர் மற்றும் தாழம்பூர் காவல் துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.