தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரமன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா நாளை (செப்டம்பர் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தியாவில் மைசூருக்குப் பிறகு மிகப்பெரும் தசரா கொண்டாட்டமாகக் கருதப்படும் இந்த விழா, திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரமன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மகா சூரசம்ஹாரம் அக்டோபர் 2ஆம் தேதி நள்ளிரவு கோவிலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் நடைபெற உள்ளது.
திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்பாள் பல்வேறு அலங்கார கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வரும். நாளை கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், பல பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியதால், கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆன்மிகத் திருவிழா சூழலில் ஒளிர்கின்றன.








