பொறியியல் , கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கல்வி இயக்கங்களில் கடந்த ஆண்டை விட 25% கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இரண்டரை லட்சத்தை தாண்டிய பொறியியல் படிப்பு பட்டதாரிகளுடைய எண்ணிக்கை இந்த ஆண்டு மூன்றரை லட்சத்தை தாண்டி இருப்பதற்கு புள்ளி விவரங்கள் உள்ளன.
கலை அறிவியல் கல்லூரிகளில் 15 புதிய கல்லூரிகளை துவங்க இருக்கிறோம். 64 கல்லூரிகளில் ஷிப்ட் 2 பாடப்பிரிவுகளை வகுத்து மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம்.
பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரி கல்வி இயக்கத்தில் ஏழு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதுவன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு தமிழ்வழி கல்வியில் பயின்று வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்க பரிசு தந்து ஊக்கப்படுத்துவதன் மூலம் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே எல்லா நிலையிலும் உயர்கல்வியை உயர்ந்த இடத்தில் உயர்த்திச் செல்வதற்கு முதலமைச்சர் துணை முதலமைச்சர் இருவரும் உயர்கல்வி துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகின்ற காரணத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி இது.
ஒரு காலத்தில் அதிகம் படித்த மாணவர்கள் எந்த மாநிலம் என்று கேட்டால் கேரளா என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைக்கு இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம் படித்த மாணவர்கள் உள்ள பகுதி அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு தமிழ்நாடு என்று சொல்லுகிற பெருமை திராவிட மாடல் தளபதி மு.க ஸ்டாலின் ஆட்சியில் தொடர்கிறது அந்த பணி இன்னும் தொடரும் .
அவர்கள் சொல்லுவது பொய் பிரச்சாரம் என்பதற்கு அடையாளம் கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையுடைய எண்ணிக்கை எவ்வளவு இடைநிற்றல் எவ்வளவு கடந்த நான்கு ஆண்டு ஆண்டுகளில் நாங்கள் எடுத்துக் கொண்ட வளர்ச்சி எவ்வளவு இடைநிற்றல் எவ்வளவு புதிய பாடப்பிரிவுகள் எவ்வளவு மாணவர் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எண்ணி பார்த்தாலே கணக்கு தெரியும் .
மற்றொன்று கடந்த காலங்களில் உயர்விழி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதும் புரியும். அதைவிட உங்களுக்கு மத்திய சர்க்கார் ஒன்றிய அரசு தந்திருக்கிற புள்ளி விவரம். தனிமனித வருமானத்தில் 14 ஆண்டுகளாக ஒற்ற இலக்கில் இருந்த தமிழ்நாடு இன்னைக்கு இரட்டை இலக்கை எடுத்து இந்தியாவில் இரண்டாம் இடம் தனிமனித பொருளாதார வருமான வளர்ச்சியில் என்ற இலக்கு இருக்கிறது.
எனவே கழக அரசு திராவிட மாடல் அரசு சொல்வதெல்லாம் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு தருகிற தரவுகள். மாற்று கட்சியினர் சொல்வதெல்லாம் பொய் பிரச்சாரம் அது தமிழகத்தில் எடுபடாது.








