Home தமிழகம் ரேஷன் கார்டு மாற்றங்களுக்கு புதிய கட்டுப்பாடு – அரசு அறிவிப்பு

ரேஷன் கார்டு மாற்றங்களுக்கு புதிய கட்டுப்பாடு – அரசு அறிவிப்பு

இனிமேல் ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது வருடத்திற்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும் என தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் போன்ற நான்கு சேவைகளுக்காக ஆண்டில் ஜனவரி–ஜூன், ஜூலை–டிசம்பர் என இரண்டு முறை மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதுவரை எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தம் செய்ய முடிந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக அதிகமான விண்ணப்பங்கள் வந்ததால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்தது. இதையடுத்து, பணிச்சுமையை குறைத்து சேவைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்பையும், அரசு நலத்திட்டங்களின் பயனையும் பெறுவதற்கான முக்கிய ஆவணமாகும் என்பதையும் உணவுவழங்கல் துறை வலியுறுத்தியுள்ளது.