Home தமிழகம் “வெளிநாட்டு பயணத்தில் மனம் தொட்ட தருணம் – ஜி.யு போப்புக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்”

“வெளிநாட்டு பயணத்தில் மனம் தொட்ட தருணம் – ஜி.யு போப்புக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்”

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் உள்ள ஜி.யுபோப் கல்லூரியில் மரியாதை செலுத்தினார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை பெறுவதற்காக ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் உள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அங்குள்ள உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் ஜி. யு. போப்பின் (George Uglow Pope)கல்லறையில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் ஜி.யு போப் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சுவையை உலகறியும் வகையில் திருக்குறள் திருவாசகம் நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்தவர் என்பதை சுட்டிக்காட்டி இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்துள்ளார்.