Home தமிழகம் ஒடும் காரில் இருந்து குதித்த மாணவி:

ஒடும் காரில் இருந்து குதித்த மாணவி:

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவியை காரில் வந்த ஆறு பேர் கடத்திச் சென்றபோது சிவகங்கை பேருந்துநிலையம் அருகே ஓடும் காரிலிருந்து மாணவி குதித்து தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கீழே விழுந்து காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்புறவு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியில் 12 வது படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி பள்ளிவாசலில் அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிட்டு சென்றார்.

அப்போது எதிரில் உள்ள கடைக்கு மாணவி சென்றபோது காரில் வந்த ஆறு பேர் 17 வயது மாணவியை தூக்கி காரில் கடத்தி சென்றனர். மானாமதுரையிலிருந்து அந்த பெண்ணை காரில் கடத்தி வந்த கும்பல் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே வரும்பொழுது அவர்களோடு சண்டையிட்டுள்ளார்.

காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆறு பேரும் முகத்தை கைக்குட்டையால் மறைத்திருந்தனர் அடையாளம் தெரியாது என அந்த ஆறு பேரும் சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். என பள்ளி மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மானாமதுரை காவல் நிலைய அதிகாரிகள் வந்து பெண்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பிறகே முழு விவரம் தெரியும்.

மேலும் சம்பவ இடத்திற்கும் இறங்கி தப்பிச் சென்ற இடத்தையும் சிசிடிவி கேமரா எதுவும் உள்ளதா என காவல்துறை பார்வையிற்று வருகின்றனர். அதன் பிறகே முழு விவரம் தெரியவரும்.