Home தமிழகம் “திருக்குறுங்குடி பரபரப்பு: நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் – பக்தர்கள் அதிர்ச்சி!”

“திருக்குறுங்குடி பரபரப்பு: நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் – பக்தர்கள் அதிர்ச்சி!”

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் அங்கு ஓடும் நம்பியாற்றில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இதனிடையே நேற்றைய தினம் நம்பியாற்றில் குளித்து கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 25க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போதுவரை வெள்ளம் குறையாத காரணத்தினால் மறு உத்தரவு வரும்வரை தடை. கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வனத்துறையினர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.