தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளை குடாவில் திமுக அரசு அறிவித்த கடற்பசு பாதுகாப்பக்கத்துக்கு உலகளாவி அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவி அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்த முன்னோடி முயற்சியை பாராட்டும் தீர்மானம் அபுதாபி மாநாட்டிற்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது என்றும் இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்








