இந்தியாவின் ஓலைச் சுவடிகள் மனிதகுல வளர்ச்சி பயணத்தின் தடையங்களை கொண்டுள்ளன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் ஞான பாரதம் என்ற சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் தளத்தையும் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் உலகின் மிகப்பெரிய தொகுப்பாக இந்தியாவில் சுமார் ஒரு கோடி ஓலைச் சுவடிகள் உள்ளன என்று தெரிவித்தார்.
இந்த ஓலைச்சுவடிகள் நாட்டின் ஆயிரம் ஆண்டு கால அறிவியல் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஓலைச்சுவடிகள் தத்துவம், அறிவியல், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளியிட்ட பல்வேறு துறைகளின் பொக்கிஷத்தை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








