உத்தர பிரதேசத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் பாறைக்குள் இடையே சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
15 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருக்கும் நிலையில் இதில் தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.








